இலங்கையின் பிரபல விளையாட்டு வீரருக்கு கொலை மிரட்டல்
இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர் சுகத் திலகரத்னவிற்கு சந்தேகநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவமானது இன்று(09) அவர் கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தில் பிரபல விளையாட்டு
வீரரான சுகத் திலகரத்ன கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததற்காக, இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்காலத்தில் நஷ்ட ஈடு வழங்குமாறு சந்தேகநபர்கள் மிரட்டியுள்ளதாகவும் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளர்.
இதனையடுத்து அவரது சட்டத்தரணி சுனில் வதகலவின் சட்ட ஆலோசனைக்கு அமைய வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகத் திலகரத்ன இலங்கையில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைத்துள்ளதுடன் பல சர்வதேச வெற்றிகளை இலங்கைக்கு பெற்றுகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
