12 ஆண்டுகளின் பின் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை
நுவரெலியா கந்தபளை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டு நுவரெலியா கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி சுப்பையா மனோரஞ்சனியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
இந்த சம்பவம் தொடர்பில் 12 ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (11) நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீர சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு சிவலிங்கம் ஞானசேகரன் என்ற நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri