யாழில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் : மூவர் கைது
யாழ்ப்பாணம் - மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணிடம் இருந்து கடன் வாங்கிய நபர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்காக அவரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையிலேயே இக் கொலையினை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையின் பின்னர் பெண்ணின் சடலத்தினையும், அவரது மோட்டார் சைக்கிளினையும் அவரது வீட்டிற்கு பின்னால் புதைத்துள்ளனர்.
குறித்த பெண் காணாமல்போயுள்ளார் என்று கடந்த 1ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைபாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போதே இச் கொலை சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் கணவன், மனைவி உட்பட மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை பெண்ணின் சடலம் மீட்கப்படாத நிலையில், சடலம் நாளை காலை மீட்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.