திருகோணமலையில் இளைஞன் எடுத்த தவறான முடிவு! கதறும் பெற்றோர்
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காண்டீபன் சஞ்சீவன் (19 வயது) என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது மகன் உறங்கிக் கொண்டிருந்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக இளைஞரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவுற்ற உடன் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
