கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி (குற்றப்பார்வை)
களுத்துறை, மத்துகம பாலிகா வீதியில் இரவு பெண்ணொருவர் தனது வீட்டினுள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா என்ற 38 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில், உந்துருயொன்றில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியின் விரிவான தொகுப்புடன் இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப்பார்வை இதோ,



