தந்தையை அடித்து கொன்ற மகன்
இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த தந்தையின் சடலத்தினை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் எனவும் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் நேற்று இரவு ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையினை இரும்பு ஒன்றினால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் விசாரணைக்கு பின் சடலத்தை சட்ட வைத்தியர் ஊடாக பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
