மன்னார் மேல் நீதிமன்றத்தால் இராணுவ வீரருக்கு மரண தண்டனை
மன்னாரில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மன்னார் - பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கே 14 வருடங்களின் பின்னர் இன்று (06.12.2023) மன்னார் மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணை
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02.அக்டோபர்.2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்க தொடர்ந்தும் மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.
இதற்கமைய முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக இன்றைய தினம் (06.11.2023) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
குறித்த தீர்ப்பு வழங்கும் போது மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டடுள்ளது.
மேலும், தீர்ப்பு எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |