பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவின் மீதான கும்பல் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதுடன் மேலும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பிரியந்த குமார பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2021 டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கையரான பிரியந்த குமார இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன், அவர் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்த
நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.



