ஐரோப்பிய நாடொன்றிலிருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த தாய், மகன் மரணம்
இத்தாலியில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மற்றும் அவரது தாயாரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் மொன்சோ நகரத்தில் தொழில் செய்து வந்த இளைஞன் இலங்கை வந்துள்ளார்.
திருமணம் செய்துக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 27 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்துள்ளார்.
மகன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது தாயாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மகன் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாய் உயிரிழந்துள்ளார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இவ்வாறு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தாயும் மகனும் தங்கொட்டு வடக்கு கோனவில கிராகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாதம் உயிரிழந்த இளைஞர் திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam