கடலலையில் சிக்குண்டு வயோதிபர் மரணம்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் பகுதியில் மீனவரொருவர் கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், கட்டைபறிச்சான்-சாலையூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கரவலை இழுத்துக் கொண்டிருந்தபோது அவர் சற்று கடலுக்குள் இறங்கி வலையை இழுத்துக் கொண்டிருந்த போது அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் சடலத்தை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன சென்று பார்வையிட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களினால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri