மட்டக்களப்பில் கோவிட் தொற்றால் கர்ப்பிணி பெண் மரணம்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு கர்ப்பினி பெண் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதுடன், இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்தவர்கள் என 61 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் பதினேழு நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.
இதேவேளை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பினி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த கர்ப்பினி பெண் கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு திங்கட்கிழமை பிரசவ அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இன்று குறித்த கர்ப்பினி பெண் வயிற்றில் சிசுவுடன் மரணமடைந்துள்ளார்.


பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri