26 வருடங்களாக போராடிய தாய் பரிதாப மரணம்
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்திபனின் தாயான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி நேற்றையதினம் இறைவனடி சேர்ந்துள்ளார்.
பிள்ளைகளுக்காக ஏங்கி ஏமாற்றத்துடன் மரணிக்கும் பெற்றோர்
குறித்த தாய் 26 வருடங்களாக தன்மகனின் விடுதலைக்காகப் போராடி தன் மகனுக்குத் தான் மண்ணறைக்கு போவதற்குள் ஒரு பிடி சோறூட்ட வேண்டும் என்ற எதிர்ப்போடு இருந்து தன் பிள்ளையின் முகம் காணாமலே காலமாகியுள்ளார்.
இவ்வாறு வடக்கில் தம் உறவுகளைக் காணாமல் அவர்களுக்காக ஏங்கி கொண்டிருக்கும் பெற்றோர் பலர் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமலே தம் பிள்ளைகளை மீட்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இறந்து போயுள்ளனர்.
இவர்களுக்கான நீதி இறந்த பின்னரும் கூட இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



