15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்த குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 வருட கால விசாரணைகளின் பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
