கழிப்பறை குழியில் எரிவாயு எடுக்க முற்பட்டவர் பலி
ஹபராதுவ பகுதியில் வீட்டின் கழிப்பறை குழியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் வசிக்கும் 56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள மலக்கழிவு செல்லும் குழியிலிருந்து கார்பைட் போன்ற பொருளைச் சேர்த்து எரிவாயு எடுக்க முற்பட்ட போது படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் வீட்டின் முற்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
