விபத்துக்களால் தினந்தோறும் அதிகரிக்கும் மரணங்கள்: வைத்தியர் வெளியிட்ட முக்கிய காரணம்
இலங்கையில் நாளொன்றில் இடம்பெறும் விபத்துக்களில் சுமார் 32 முதல் 35 பேர் வரையில் உயிரிழந்து வருவதாக தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர் விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மரணங்கள், வாகன விபத்துக்கள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் சம்பவிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்துக்கும் ஒருமுறை விபத்துக்கள் காரணமாக நான்கு பேர் வரையில் மரணிக்கின்றனர்.
விபத்துக்களால் மரணம்
விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
வருடமொன்றில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரையில் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
அதாவது நாளொன்றுக்கு 32 முதல் 35 பேர் வரையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர்.
பல்வேறு காரணிகளால் மரணங்கள்
வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத்
தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள்
சம்பவிக்கின்றன.
இது மிகவும் மோசமான நிலைமையாகும். எனவே, இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதே அவசியமாகும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |