கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி
காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம்(26.04.2023) பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொடை- ஹிரேவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது நண்பர்கள் இருவருடன் ஹிரேவத்த கடற்கரையினை அண்மித்த பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் அருகிலுள்ள மற்றொரு குழுவுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் மீது மற்றைய குழுவில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிகிச்சை பலநின்றி உயிரிழப்பு
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்- ராகேஷ்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




