காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும்: மகேஷ் கட்டுலந்த தகவல்
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கட்டுலந்த, காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் பொறிமுறையை துரிதமாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ்
இதுவரை உலகில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்தையும் விட, இலங்கையில் பொருத்தமான பொறிமுறையானது விரைவாக முன்னெடுக்கப்பட்டு, உகந்த மட்டத்தில் உள்ளது என்றும் என்று அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முடித்துக் கொள்ளும் என கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் கட்டுலந்த குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவு பெற விரும்பும் உறவினர்கள்
கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் உதாரணமாக, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சிலர் சிறுநீரக அறுவை சிகிச்சை அல்லது இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சமயங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களில் கற்கும் ஆர்வமுள்ள பிள்ளைகள் இருந்தால், அவர்கள், மேலதிகக் கல்வியைப் பெறுவதற்கு அல்லது ஏதேனும் ஒரு சுயதொழிலில் ஈடுபடும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக பொருத்தமான நிறுவனங்களுக்கு வழிநடத்தப்படுவார்கள்.
இந்த நிலையில் நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,988 பேராகும் என்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
You May like this





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
