தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வவுனியாவில் குளத்தின் மூழ்கி மரணமடைந்த 4 வயது சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடச் சென்ற நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் தனது தாயுடன் பாவற்குளத்திற்கு நீராடச் சென்றிருந்த நிலையில் 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்த நிலையில் நேற்று (23) மாலை வவுனியா வைத்தியசாலையில் அவரது உடலம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த சிறுவனின் உடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (24 ) வெளியாகிய நிலையில் மரணமடைந்த சிறுவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி
குறித்த உடலத்தை அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியா - பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி பார்க்கும் போது, குளத்திற்குள் நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்துள்ள நிலையில் இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
