வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா, செட்டிக்குளம், முதலியார்குளம் பகுதியில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri