யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதி தெரிவு
யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நேற்று நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 04 மேலதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தரம் உயர்த்துதல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26ஆம் திகதி பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது.
சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குணபாடம், மூலதத்துவம், குழந்தை மற்றும் மகளிர் மருத்துவம் ஆகிய கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து முன்னாள் துறைத் தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான விவியன் சத்தியசீலன் பதில் பீடாதிபதியாகச் செயற்பட்டு வந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
