வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரித்திணைக்களம், இந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், பாதகமான காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, காலக்கெடுவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய காலக்கெடு
எனவே வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பித்தால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வருமான வரி அறிக்கைகள், இணைய அமைப்பு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ள, உள்நாட்டு இறைவரித்திணைக்களம், தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுபவர்கள் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களிலிருந்து தேவையான உதவியைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri