பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடு விதித்த இஸ்ரேல்
பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் கோரிய நிலையில் போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த இஸ்ரேல், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு காலக்கெடு விதித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிய கேபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) தெரிவித்ததாவது, மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
பொதுமக்களை வெளியற்ற பேச்சுவார்த்தை
ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பாலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியற்ற அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த உள்ளோம்.
இது தீவிரமான நடவடிக்கைதான். ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும்.
இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |