கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் இன்று (20) GPS கழுத்துப் பட்டிவுடன் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கால்நடை பண்ணையார்கள் அளித்த தகவலின் பேரில் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிரித்தல்ல கால்நடை மருத்துவர் கலிங்கு ஆராய்ச்சி குறித்த பகுதிக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர் .
கல்லீரல் செயலிழப்பு
சுமார் 45 வயதுடைய பெண் காட்டு யானை என்றும், அது கல்லீரல் செயலிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த யானை மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும்,காட்டு யானை தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் GPS கழுத்துப்பட்டி அணிந்திருந்தாகவும் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |