புத்தளத்தில் திடீரென கரையொதுங்கிய 12 திமிங்கலங்கள்(Photos)
புத்தளம் கட்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11.02.2023) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்துள்ளனர்.




உயிரிழந்த 3 திமிங்கலங்கள்
இந்த நிலையில் உயிரிழந்த 3 திமிங்கலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திமிங்கலம் (Filet Whale) பைலட் வேல் என அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இனைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்பியமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam