மூதூர் கலப்பு பகுதியில் இருந்து சடலம் மீட்பு
மூதூர்( Mutur) பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று(01.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.
மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது சடலமாக மீட்கப்பட்டவரின் கை,கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டு காணப்பட்டுள்ளமையினால் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று பகல்
குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam