உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தை இன்றைய தினம் (09.02.2023) மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் இருந்த ஆசிரியை
குறித்த ஆசிரியையின் கணவர் யாழ். இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருகிறார்.
இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்வில் வசித்துவரும் நிலையில், ஆசிரியை தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிராமசேவகர் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் மண்டபத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக ஆசிரியர் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளது என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.




