மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப்பிரிவை சேர்ந்த தாதி சடலமாக மீட்பு
கட்டுகஸ்தோட்டை, தொடம்வல பாலத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தாதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 36 வயதுடைய வவுனியாவில் உள்ள இராணுவ மருத்துவப் பிரிவின் இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை
இவரது சடலம் கடந்த 19 ஆம் திகதி மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (21) கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய முடியாததனால் சடலத்தின் பாகங்களை பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக சம்பத் மேற்கொண்டு வருகின்றார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri