ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம் - விசாரணைகள் தீவிரம்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு - 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்துள்ள நபரை அடையாளம் காணும் நோக்கிலும், குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பாகவும் மட்டக்குளி பொலிஸார் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
