பண்ணைக் கடலில் தவறி விழுந்தர இளைஞர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், பண்ணைக் கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வி.கௌதமன் எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பண்ணைப் பாலத்தடியில் நேற்று மாலை குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்த வேளை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவறி விழுந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்துச் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாகக் கடற்படையினர் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினமும் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் பண்ணைக் கடலில் இருந்து இன்று காலை குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam