வவுனியாவில் காயங்களுடன் 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு - விசாரணைகள் தீவிரம்

Investigation Police Dead Vavuniya
By Thileepan Jul 06, 2021 11:17 AM GMT
Report

வவுனியா - லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து சில விடயங்கள் தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் சடலமாக மீட்கப்பட்ட உதயச்சந்திரன் சஞ்சீவன் கடைசி பிள்ளை. இவருக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.

இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன், பெரிய வீடு ஒன்றுக்கான நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும், அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றையதினம் இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளதை தொடர்ந்து இன்று காலை தாயார் வைத்தியசாலைக்கும், தந்தை வேலைக்கும் சென்றிருந்த நிலையில் சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் சிறுவன் சடலமாக கிடந்துள்ளார். அதன் பின்னர் சகோதரிகள், சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு சென்ற சகோதரன் சடலத்தை பார்த்த போது முகத்தில் காயங்களுடனும், கழுத்தில் வெட்டுக்காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

அத்துடன் சிறிய பூங்கன்று ஒன்றில் துணி ஒன்றும் கட்டப்பட்டிருந்துள்ளது. இது சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன், தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை பார்வையிட்டதுடன், சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்துள்ளனர்.

எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் எவ்வித தகவல்களுடம் கிடைக்காத நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கையினைப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முதலாம் இணைப்பு

வவுனியா - லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US