மியன்மாரில் சுரங்க விபத்தில் 80 பேர் காணாமல் போனதாக அச்சம்- தேடும் பணி ஆரம்பம்
மியான்மார் நாட்டில் ஏற்பட்ட சுரங்க திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார்.
70 பேர் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. வடக்கு மியான்மரில் உள்ள மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
மியான்மர் நாட்டில் உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ளநிலையில், அங்கு பல ஆண்டுகளாக அங்கு ஏராளமான விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.
மியன்மாரில் மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் பணிகள் குறித்த பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ளன.
எனினும் உள்ளூர் மக்கள் பெரும்பாலும் விதிமுறைகளை மீறுகின்றனர்.
அங்கு வேலையின்மை மற்றும் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள வறுமைநிலை காரணமாக அவர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்க விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.







