நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்
ஈரான் போர் சூழ்நிலையால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமையை மக்கள் புரிந்து கொண்டு செயற்படாவிட்டால் திடீரென பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் மோதல் போக்கு விரிவடைந்து வரும் நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி
இலங்கை பொற்றோலியக் கூட்டுத்தாபனம் 35 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாக பெருமையாக அறிவித்தாலும் 2800 மொற்றிக் தொன் ஒரு நாளுக்கான பாவனை என்ற கணிப்பீட்டிலேயே இதை அறிவித்துள்ளது.
ஆனால் ஒரு நாளைக்கு 6000 மொற்றிக் தொன்னுக்கு மேல் எரிபொருள் நிலையங்களில் விநியோகம் நடைபெற்றால் கையிருப்பில் இருக்கும் தொகை 14-20 நாட்களுக்கே போதுமானதாகும்.
இதனால் பாரிய நெருக்கடி ஏற்படலாம். அதை தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம்.ஆனால் அரசாங்கம் சொல்வது என்வென்றால், ஆர்மோஸ் ஜல சந்தியை மூடினால் எரிபொருள் இல்லாமல் போவதென்றால் ஒரு அரசாங்கம் எதற்கு என வாய்வீச்சு பேசினர்.

சிங்கப்பூரில் நேற்று எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 18 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது டொலர் 25 வரை அதிகரிக்க கூடும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால் எரிபொருளுக்காக பாரிய அளவில் செலவு செய்ய வேண்டி ஏற்படலாம்.ஆர்மோஸ் ஜல சந்தி மூடப்பட்டுள்ளது.ஆர்மோஸ் ஜல சந்தியினூடாகவே ஆசியாவுக்கு அதிகளவான எரிபொருள் விநியோகிக்கும் மார்க்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஏவுகணை- ட்ரோன் தாக்குதலுக்கு மேலும் பாதுகாப்பு அவசியம்! உக்ரேன் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு