ஜனாதிபதி தேர்தலில் நிற்க தயார் : தயாசிறி தெரிவிப்பு
"வாய்ப்பு கிடைக்குமாயின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையின் அனைத்து சமூகத்தினராலும் தமக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கட்சிகளுடனான இணக்கம்
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தான் இணக்கமான நிலையில் உள்ளேன்.

எனக்கு எந்த கட்சியுடனும், சமூகத்துடனும் விரோதம் இல்லை. நான் எல்லோரையும் நேசிக்கும் நபர். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயமாக போட்டியிடுவதுடன் தேர்தலில் வெற்றியும் பெறுவேன்." என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த 20ஆம் திகதி தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என்னும் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri