ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்கும், இறைமையும், ஆணையும்

Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka Election
By T.Thibaharan Mar 19, 2024 10:48 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

இலங்கை அரசியலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் எதிர்வு கூறல்கள் என்பவற்றை சிங்கள சிங்கள தேசம் எதிர்நோக்கி இருக்கும் அதேவேளை தமிழ அரசியல் பரப்பில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தேர்தலை பகிஷ்கரிப்பதை தாரக மந்திரமாக உச்சாடனம் செய்கிறார்கள் ""தேசியம் என்பது ஜனநாயகத்தின் காவு வாகனம்"" எனவே மக்களின் கருத்தை செயல் பூர்வமாக வெளிக்காட்டுவது தேர்தல் தேர்தலில் பங்கு வட்டி தமது வாக்கை பதிவு செய்து உறுதிப்படுத்துவது இங்கே தேர்தலை பகிஷ்கரிக்கும்படி மக்களிடம் கேட்பது என்பது முதலாவதாக தேர்தலை பகிஷ்கரிப்பது ஜனநாயக விரோதச் செயல் மாத்திமல்ல மக்களுடைய ஜனநாய உரிமையை மறுதலிக்கின்ற செயலாகவும் அமையும்.

இரண்டாவதாக ஒரு மக்களுடைய கருத்தை அல்லது ஒரு கட்சியினுடைய கருத்தையோ கொள்கையோ வெளியுலகத்துக்கு காட்டுவது அல்லது நிரூபிப்பது தேர்தலில் பங்குபற்றி வாக்குப் பலத்தால்த்தான் நிலைநிறுத்த முடியும். இன்றைய ஜனநாயக உலகில் ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு மக்கள் கூட்டம் ஜனநாயக தேர்தலில் பங்கு பற்றி மக்களின் கருத்தை தமக்குச் சார்பாக திரட்டி தேர்தலில் மக்களை வாக்களிக்க வைத்து தமது பலத்தை நிரூபிப்பதன் மூலமே அரசியல் கட்சி தன்னுடைய கருத்தையோ கொள்கையையோ மக்கள் இறைமையை வாக்குகளால் வெளிப்படுத்தி வெளியுலகிற்கு நிரூபிக்க முடியும். 

எனவே தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை கோரிக்கைகளாக முன்வைத்து அதாவது ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் விஞ்ஞானமாக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படையிலமைந்த தமிழ் தேசிய அபிலாசைகளை தேர்தல் விஞ்ஞாபனமாக முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை ஒன்று குவித்து தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு மாத்திரம் வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசையை ஒரு மக்கள் ஆணையாக பிரகடனப்படுத்த முடியும்.

இதனை ஒரு தமிழ்மக்களின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பாகவும்(Referendum) பயன்படுத்த முடியும். அது சர்வதேச சூழலில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அரசியல் வெளியே திறந்து விடும். 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை பண்ணாகத்துடன் அப்படியே காகித அறிக்கையாக வைக்கப்பட்டிருந்தால் பின்னாளில் அது ஒரு பேசுபொருளாக இருந்திருக்காது. மக்கள் ஆணையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்கும், இறைமையும், ஆணையும் | Article About Presidential Election

இலங்கை தீவு முழுவதிலும் பிரச்சாரம்

அது ஒரு கட்சியின் பிரகடனமாகவே வரலாற்றில் நிலை பெற்றிருக்கும். தமிழ் தேசிய அசைவியக்கத்தை உந்தித் தள்ளுவதற்கான சக்தியாகவும் மாறி இருக்காது. ஆனால் அந்தப் பிரகடனத்தை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களுடைய 78% வாக்குகளை ஒன்று குவித்து பெற்ற வெற்றிதான் வட்டுகோட்டை தீர்மானத்தின் பெறுமதியை உயர்த்தியது.

தமிழ் மக்கள் தமது இறைமையை பிரயோகித்ததை அல்லது வெளிக்காட்டியதை உணர்த்தியது. அதனை மக்கள் ஆணை என்று உலகம் ஏற்றுக்கொண்டது. இந்த வரலாற்று நடைமுறை உதாரணத்தை மீண்டும் ஒருமுறை சர்வதேசத்திற்கு வழிகாட்டுவதற்கான ஒரு மக்கள் ஆணையை பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி ஈழத்தமிழர் தேசிய அபிலாசைகளை தேர்தல் விஞ்ஞானமாக முன்வைத்து இலங்கை தீவு முழுவதிலும் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் நடைமுறையில் இடம் உண்டு.

இதனை இலங்கை சிங்கள பௌத்த ஒடுக்குமுறை அரச இயந்திரத்தால் தடுத்து நிறுத்தி விடவும் முடியாது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு தமிழ் தேசிய எழுச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவும், தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த முடியும்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் உச்சகட்டம் அடைந்திருந்த காலத்தில் காலத்தின் தேவைக்கேற்றமாறு தேர்தலை புலிகள் கையாளத் தவறவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். 1982ம் ஆண்டுக்கு பின்னர் தமிழர் தாயகத்தில் தேர்தல்களை விடுதலைப் புலிகள் தொடர்ந்து பகிஷ்கரித்தும், எதிர்த்தும் வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலை என்பதை தமது கொள்கையாக வரித்துக் கொண்டவர்கள் தேர்தலில் பங்குபற்றுவது என்பது கொள்கை ரீதியில் முரணானதும் கடினமானதும்தான்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்கும், இறைமையும், ஆணையும் | Article About Presidential Election

எனினும் 2002 ஆம் ஆண்டு ரணில்-பிரபா ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுந்த போது தந்திரோபய ரீதியில் விடுதலைப் புலிகள் தேர்தலை எதிர்கொண்டனர். ஆனால் ஆயுதப் போராட்டம் என்ற தமது கொள்கைக்கு எதிராக தாமே களத்தில் இறங்கவில்லை. 

ஆனாலும் விடுதலைப் புலிகள் தேர்தலை எதிர் கொண்டார்கள் அது எப்படி என்றால் தாம் நேரடியாக களத்தில் தேர்தலில் இறங்காமல் அவர்களால் முன்னாளில் ஓரங்கட்டப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், தடைசெய்யப்பட்டவர்கள் என்பவர்களில் யதார்த்தத்தை உணர்ந்து புலிகளுடன் இணங்கி செயற்பட கூடியவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு அரசியல் சக்தியை உருவாக்கினர்.

ஒரு தவறான எண்ணக்கரு

விடுதலைப் புலிகளை அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகப்பிரயதிகள் என ஏற்றுக்கொண்டு அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனையே முன்வைத்து தேர்தலில் போட்டியிட வைத்து 22 ஆசனங்களை வென்று புலிகளே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதையும், விடுதலைபுலிகள் ஒரு மக்கள் இயக்கம் என்பதையும் சர்வதேச உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்.

இவ்வாறு தேர்தலில் தேர்தலின் மூலம் தம்மை நிரூபித்து காட்டியதனால் தான் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அயர்லாந்துக்கு விடுதலைப் புலிகள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பயணம் செய்த போது அமைச்சர்தர அந்தஸ்த்து வழங்கி வரவேற்கப்பட்டார் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்கும், இறைமையும், ஆணையும் | Article About Presidential Election

உலக அரசியலில் மக்கள் பலம் படைத்த அரசியல் பிரமுகர்களை இவ்வாறுதான் வரவேற்ப்பர். இது மேற்குலக கலாச்சாரமும் கூட. 

அவ்வாறே அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் ஒரு பக்கமாகவும் அதே நேரம் அரசியல் போராட்டத்தை இன்னொரு பிரிவாகவும் நடத்தினர். அயர்லாந்து குடியரசு ராணுவம் எனப்படும் Irish Republican Army ( IRA) அயர்லாந்து போராளிகள் பிரித்தானிய படைகளுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

மறுபுறம் IRA இன் அரசியல் கோட்பாட்டை அடைவதற்கான மக்கள் இயக்கமாக Sinn Féin பிரித்தானிய அரசியல் சட்ட வரம்புக்குள் உட்பட்டு தேர்தல் அரசியலுக்கு முகம் கொடுத்தது . இந்த வழிமுறையில் "Sinn Féin" தேர்தலில் பங்கு பங்கு பற்றி தென் அயர்லாந்தில் வெற்றி பெற்றனர்.

இறுதியில்1921ம் ஆண்டு இந்த தேர்தல் அரசியல் வெற்றிதான் தென் அயர்லாந்துக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறான சர்வதேச உதாரணங்கள் ஏராளம் எம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

இந்த உதாரணங்களில் இருந்து ஈழத் தமிழ் அரசியல் பாடங்களைக் கற்று பிரயோகிக்க வேண்டும். இலங்கை தீவின் ஜனாதிபதி தேர்தல் என்பது இவ்வளவு காலமும் அது பெரும்பான்மை கட்சிகளுடைய நலங்களுக்கே துணை புரியும் என்ற ஒரு தவறான எண்ணக்கரு தமிழ் அரசியல் பரப்பில் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு விட்டது.

ராஜதந்திர அனுகுமுறை

ஆனால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் தமது நலன்களுக்காகவும் சிங்கள தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கானதும் வாய்ப்பாகவும் தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை வெளிக்காட்டி மக்கள் ஆணையை பெறுவதற்குமான ஒரு தேர்தலாக பயன்படுத்தலாம்.

அதுமட்டு அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் இறைமையை வாக்குகளால் பிரயோகிக்கும் இடமாகவும் பயன்படுத்தலாம் என்ற அரசியல் சூக்குமத்தை தமிழ் அரசியல்வாதிகள் அறிந்திருக்கவில்லை அல்லது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. மாறாக பதவி நலன்களை மட்டமே அரசியல் தலைமைகளால் கருத்தில் கொள்ளப்பட்டது என்பதுவே யதார்த்தமாகும். 

இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பாராளுமன்ற பொதுத் தேர்தலோ, மாகாண சபை தேர்தலோ, உள்ளூராட்சி சபை தேர்தலோ தமிழ் அரசியல் கட்சிகளுக்கு நலனை பயக்க வல்லது. அரசியல் தலைவர்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சுகத்தை கொடுத்தது.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் என்பது இந்த அரசியல் தலைவர்களுக்கு எந்த நலனையும் கொடுக்காது என்பதனாலேதான் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் அரசியல் தலைவர்கள் பெரிதும் கவனத்திற்கு கொள்ளாமல் பாரா முகமாக விட்டு விட்டார்கள். உண்மையில் சிங்களத் தலைவர்களை தெரிவு செய்யும், அல்லது ஒரு சிங்கள தலைவரை தோற்கடிக்கும் வல்லமையும் எப்போதும் தமிழ் மக்கள் கையில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள தவறி விடுகின்றனர்.

அரசியலில் நலன்களே முக்கியம் பெறுகின்றன. அரசியல் தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் நலன் பயக்காத எதையும் அவர்கள் கையில் எடுக்க விரும்ப மாட்டார்கள் என்பதும் யதார்த்தம்தான். எனினும் இன்றைய ஈழத் தமிழர் அரசியல் செல்நெறியில் ஜனாதிபதித் தேர்தலை ராஜதந்திர அனுகுமுறைக்குள்ளாலும், இலங்கை அரசியல் யாப்பில் இருக்கின்ற ஓட்டைகளுக்குள்ளாலும் தமிழ் மக்கள் சிறப்பாக கையாண்டு தமது குறைந்தபட்ச நலன்களையும் தேவைகளையும் அடைய முடியும்.

அத்தோடு தமிழ் வேட்பாளரை நிறுத்தி சிங்கள தேசத்தை நெருக்கடிக்குள் சிக்க வைக்க முடியும். எதிரியை நெருக்கடியில் தள்ளிவைப்பதன் மூலமே அவனிடம் இருந்து எமக்கு சாதகமான எதையும் பெற முடியும் என வரலாறு பாடம் புகட்டுகிறது.

நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் ஈழத்தமிழ அரசியல் வரலாறாக வரலாறு துயரத்துடன் பதிவு செய்கிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 19 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US