தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே..! அநுர அரசில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்
இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
குருநாகலில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதப்படுகிறார்கள்.
மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றார்கள்.

ஆளும் தரப்பினர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, மாறாக நிலக்கரி மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அநுர அரசிற்கு எதிராக கிளம்பும் எதிர்க்கட்சிகள்
இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு, ஆளும் தரப்பினரைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்பே குறிப்பிட்டுள்ளமை, சுயாதீன நீதித்துறையின் கௌரவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றது.

பேச்சு சுதந்திரத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.
எனவே, அரசின் இந்த அடக்குமுறைப் போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்