வேட்புமனுத் தாக்கலில் சட்டவிரோத செயற்பாடு: தயாசிறி ஜயசேகர முறைப்பாடு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்திற்கான வேட்புமனுத் தாக்கலின் போது சட்டவிரோதமாக தனது கையொப்பம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளார்.
தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் அதிகார வரம்பில் போட்டியிடும் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்புமனு தாக்கல்
இதற்கமைய குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிட தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படுவது ஜனவரி 18ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் 15 மாவட்டங்களில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
