நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய தயாசிறி

Parliament of Sri Lanka Sri Lanka Dayasiri Jayasekara
By Rakesh Sep 11, 2026 06:45 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், அவர் சட்டமன்றத்துக்குத் தலைமை தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ சட்டப்படியோ ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிரான இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளைச் சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் நேற்று(10.09.2026) சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை அவர் முன்வைத்தார்.

சபாநாயகர் பதவிக் காலத்தில் 

அவர் முன்வைத்த சிறப்புரிமைப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல் மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப் பிரச்சினையாக இது அமைகின்றது.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய தயாசிறி | Dayasiri Issue Breach Parliamentary Privilege

1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு விசாரித்து வருகின்றது.

ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர் குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச் சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும் நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது.

கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினை

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் 'அரசு ஊழியர்' என்ற வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய தயாசிறி | Dayasiri Issue Breach Parliamentary Privilege

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும்.

எனினும், தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.

மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட முடியாது.

இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்

அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US