விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க முயற்சிக்கும் தாவூத் இப்ராஹிம்.. அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்!
தாவூத் இப்ராஹிமின் 'சிண்டிகேட்' என்ற அமைப்பு தென்னிந்தியா வழியாக போதைப் பொருட்களை கடத்துவதற்கு இலங்கையர்களுடன் இணைந்த செயற்படுவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்திய புலனாய்வு அமைப்புகளின் சமீபத்திய உளவுத்துறை உள்ளீடுகளின்படி இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்கும் முயற்சி
மேலும் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் இடைமறிப்புகளைப் (intercepts) பதிவு செய்துள்ளன.

இது மும்பையை தளமாகக் கொண்ட செயற்படும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் இலங்கை கும்பல்களுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன.
மேலும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுவான வலையமைப்புகள் மூலம் செயற்படுகின்றன.
மாபெரும் போதை தொழிற்சாலை
IANS செய்திகளின் படி, 'D Syndicate' உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள குழுக்களுடன் இணைந்து கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புலனாய்வு அமைப்புகள் கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது.

இந்தக் கும்பல் இலங்கையிலும் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் வலையமைப்பைப் பயன்படுத்தி அதன் போதைப்பொருள் வணிகத்தை மேலும் விரிவுபடுத்துவதாக நம்பப்படுகிறது.
முக்கியமாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற வட மாநிலங்களில் மேற் கொண்டு நடவடிக்கைகளில் 'சிண்டிகேட்' பெரும் இழப்புகளைச் சந்தித்து வரும் நேரத்தில் இந்த தொடர்பில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிராமத்துக்கு மாறும் மோசடிகள்
IANS செய்திகளின் படி, குற்றவியல் 'சிண்டிகேட்' அமைப்பு அதன் செயல்பாடுகளை உயர் பாதுகாப்பு நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு மாற்றுவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் இப்போது இந்த தொலைதூர இடங்களில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து முக்கிய நகரங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே நடத்தப்பட்ட சோதனையில், தாவூத் இப்ராஹிம் நடத்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது முழு நாட்டிற்கும் விநியோகிக்க போதுமான உற்பத்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - இந்ரஜித்
[ZQKDB4C ]
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri