தாவூத் இப்ராஹிமின் திட்டம் குறித்த புலனாய்வு தகவல்.. இலங்கையின் அதிரடி பதில்!
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க தாவூத் இப்ராஹிம் முயற்சிப்பதாக வெளியான புலனாய்வு தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக பொலிஸார் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய உளவுத்துறை அமைப்புகள், இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணியைக் கண்டுபிடித்துள்ளதாக செய்திகளைத் வெளியாகியிருந்தன.
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க முயற்சிக்கும் தாவூத் இப்ராஹிம்.. அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்!
தயார் நிலையில் அரசாங்கம்..
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது என்றும், ஆனால் போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பொலிஸார் இந்தத் தகவலைப் பெற்றிருக்கலாம், அவர்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்கள்” எனவும் கூறியுள்ளார்.
டி-சிண்டிகேட் என்றும் அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட், தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்பட்டதை அடுத்து இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் டி-சிண்டிகேட் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு இப்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் பழைய கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri