உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்!
தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் தொடர்பில் கேகாலை தெவலேகம பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 76 வயதுடைய கே.ரெகோனா கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தாயின் உடலை துண்டினால் மூடிவிட்டு வீட்டுக்கு அருகில் குப்பி விளக்கை ஏற்றிவிட்டு கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டை விட்டு மகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கின்றனர், திருமணமாகாத மகள் கூலி வேலை செய்து தாயாருக்கு உணவளித்து வந்துள்ளார்.
ஜா-எல பகுதியில் மகள் பணம் தேடிய போது, தாய் இறந்துவிட்டதாக கேள்வியுற்ற கிராம உத்தியோகத்தர் சகோதரன் ஒருவருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
