பல எச்சரிக்கைகளுக்கு பின் ட்ரம்ப் - புடின் இடையே நடைபெறவுள்ள சந்திப்பு
அமெரிக்க- ரஷ்ய தலைவர்களின் சந்திப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று டொனால்ட் ட்ரம்புக்கும், விளாடிமிர் புடினும் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் நடத்தப்படவுள்ளது இதனை அமெரிக்க தரப்பும், ரஷ்ய தரப்பும் உறுதி செய்துள்ளன.
எச்சரிக்கைக்கான காலக்கெடு
உக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும் என்று ட்ரம்ப் தாம் பதவியேற்ற காலத்தில் இருந்து வலியுறுத்தி வந்தார்.
எனினும் புடின் அதனை ஏற்றுக்கொள்ளாமல் உக்ரைனுக்கு நிபந்தனைகளை விதித்து வந்தார்.
இந்தநிலையில், போர் நிறுத்தத்துக்கு உடன்படவேண்டும் இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த எச்சரிக்கைக்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், சந்திப்புக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா



