மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல் (Video)
மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் போது அன்றைய தினம் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஊடகங்களுக்கு நேற்று (17.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் 'சதொச' மனித புதைகுழி வழக்கு (B-232/2018) நேற்று (17.10.2022) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே வைத்தியர் ராஜபக்ஸவுக்கு மன்றினால் அழைப்பானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மன்னார் நீதிமன்றத்தில் தான் இதற்கான அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அறிக்கை
நீதிமன்ற அறிக்கைக்கு அமைவாக மன்னார் 'சதொச' மனித புதைகுழியை மீண்டும் அகழ்வு செய்வதற்கு என்ன என்ன விடயங்கள் தேவை, அழைக்கப்பட வேண்டிய திணைக்களங்கள் மற்றும் செலவு தொகை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு அமைவாக மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

மன்னார் சதொச மனித புதைகுழியின் அகழ்வு பணி, எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் அடுத்த தவணையில் தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி புராதனி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அகழ்வு பணி
ஓ.எம்.பியால் உதவு தொகை மேற்கொள்ள முடியும் என்றும், அதற்கான கோரிக்கையினை விடுக்கும் பட்சத்தில் காணாமலாக்கப்பட்டுள்ளோர் அலுவலகத்தில் ஏற்கனவே மேற்கொண்டது போன்ற குறித்த அகழ்வு பணி மேற்கொள்வதற்கு நிதி உதவியை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அடுத்த தவணையின் போது மன்னார் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணி எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து தெளிவாக கூறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக அன்றைய தினம் புதைகுழி அகழ்வு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri