சஷீ வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் சஷீ வீரவங்சவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதியான சஷீ வீரவ்ங்ச சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தி்ல் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
வேண்டுகோள் நிராகரிப்பு
எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெகுலாவள, குறித்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உள்ளிட்ட சாட்சிகளுக்கும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |