மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் ஞானசார தேரர்.. விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கைது நடவடிக்கை..
இவ்வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவரான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்