அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க பற்றி அணியின் தலைவர் தசுன் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை அணியின் தலைவர்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, நீதிமன்றம் விரைவில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பேச வேண்டியதில்லை என இலங்கை அணியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய இலங்கை
உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பின் இன்று காலை இலங்கை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது, இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸாரிற்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.