இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இன்று ஏற்பட்ட திடீர் திருப்பம் (Video)
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிணை அனுமதியை சிட்னி நீதிமன்றமொன்று இன்றைய தினம் (17.11.2022) வழங்கியுள்ளது.
தனுஷ்க குணதிலக்க பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின் கீழ் கைது
20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனுஷ்க குணதிலக்க வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் கடந்த 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7ஆம் திகதி மறுத்திருந்தார்.
இதனையடுத்து தனுஷ்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பிணை தொடர்பான இரண்டாவது முயற்சி
இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்தே சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.
150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.