தனுஷ்க குணதிலக்கவிற்காக பாரிய தொகையை செலவிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாரிய செலவுகளை செய்து வருவதாக தெரிவிககப்படுகின்றது.
அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுமார் 380,000 அவுஸ்திரேலிய டொலர்களை (96 லட்சம் இலங்கை ரூபா) செலுத்தியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

பெண்ணை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் தனுஷ்க குணதில சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு மேலதிக ஆதரவை வழங்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri