தனுஷ்க குணதிலக்க தொடர்பிலான முக்கிய வீடியோ ஆதாரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 31 வயதான தனுஷ்க குணதிலக்க அனுமதியின்றி உறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் சிட்னி ரயில் நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட கோப்புகளைக் கொண்ட யூ.எஸ்.பி.யை கிரிக்கெட் வீரரின் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளமையினால் வழக்கின் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
வழக்கை விசாரித்த ரொபர்ட் வில்லியம்ஸ் நீதிமன்றம் அந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செயலியின் ஊடாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இருவரும் சந்தித்துள்ளனர்.
இரவு 11 மணியளவில் சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் செல்வதற்கு முன், இருவரும் நகரத்தில் மது அருந்தியதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதன் பின்னரான தகாத உறவின் போது தனுஷ்க ஆக்ரோஷமாக நடந்த கொண்டதாவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணின் கோரிக்கைகளை மதிக்காமல் கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என அவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.