ரெலோ கட்சியின் மன்னார் செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் செயலாளர்,துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை கட்சியின் தலைவர்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மீண்டும் தெரிவு
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் என பலர் இடம் பெற்றது. இதன் பேகாது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் தெரிவு இடம்பெற்றது.

கட்சியின் முன்னாள் செயலாளரும்,மன்னார் நகர சபையின் தவிசாளருமான டானியல் வசந்தன் அதிகூடிய வாக்குகளினால் கட்டியின் மாவட்ட என செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கட்சியின் உப மாவட்ட செயலாளர் கட்சியின் உறுப்பினர் அருள்ராஜ் ஜஸ்ரின் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.







சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri