சட்டவிரோத மது உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் ஆபத்தான மூலப்பொருட்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வரி உயர்வை தொடர்ந்து, இலங்கையர்கள் பலர் அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக சட்டவிரோத மது உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுபான விற்பனை
இந்த நிலையில் மதுபான விற்பனையும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக இலங்கை மதுபான உரிமம் வைத்திருப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் டலஸ் பெர்னாண்டோ, காட்டு யானைகளை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரான்குலைசர்கள் உட்பட பல ஆபத்தான இரசாயனங்கள், சட்டவிரோத மது உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
வரிகளை குறைக்க கோரிக்கை
இதேவேளை வரிகள் குறைக்கப்பட்டால், அரசாங்கம் தனது வருமானத்தை தற்போதைய 170 பில்லியன் ரூபாவிலிருந்து 300 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடியும் என்றும் இலங்கை மதுபான உரிமம் வைத்திருப்போர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
